நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹஸன் அல் பஸரீ என்ற இமாமிடம் வந்த ஒருவர், வறுமையில் வாடுவதாக தெரிவித்தார். அதற்கு இமாம், 'பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுங்கள்' என அனுப்பினார். அதன் பிறகு இரண்டு நபர்கள் அவரைத் தேடி வந்தனர். அதில் ஒருவர் நோயால் அவதிப்படுவதாகவும், மற்றொருவர் தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்றும் வருத்தப்பட்டனர். அவர்களுக்கும் அதே பதிலையே கூறி அனுப்பினார். இதை கவனித்த சீடர்கள், 'மூன்று நபர்களும் வெவ்வேறு பிரச்னைகளை கூறினர். ஆனால் நீங்கள் ஒரே பதிலைச் சொல்கிறீர்களே'' எனக் கேட்டனர்.
'பிரச்னை எதுவானாலும் அதற்கான காரணம் ஒன்றே' என்றார்.