நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயாஸித் என்னும் சூபி ஞானி சொல்வதை கேளுங்கள். ஒரு உண்மை புரியும். இளைஞனாக வாழ்ந்த போது தவறு செய்பவர்களை எல்லாம் திருத்த வேண்டும் என நினைத்தேன். அதற்கான பலத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினேன். காலம் ஓடியது. ஆனால் ஒருவரையும் திருத்த முடியவில்லை. சரி. குடும்பத்தினரையாவது திருத்தலாம் என பாடுபட்டேன். அதுவும் பலனளிக்கவில்லை. முதுமை வந்து விட்டது. வாழ்வை இழந்து விட்டேன். அப்போது உண்மை புரிந்தது. 'பிறரை மாற்றுவதற்கு நான் யார்? என்னை மாற்றினால் போதும்' என்ற தெளிவு பிறந்தது.
பார்த்தீர்களா... உலகில் உள்ள அனைவரும் பலவித குணம் கொண்டவர்கள். அவர்களை அப்படியே ஏற்பதே சிறந்தது. மீறி திருத்த முயற்சி செய்தால் வாழ்வு வீணாகும்.