நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமிய அடிப்படைக் கடமைகள் ஐந்து.
1. இறைவனை வழிபடுவது.
2. தொழுகை செய்வது.
3. ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்பது.
4. ஆண்டு தோறும் வருமானத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு அளிப்பது (ஜகாத் - ஏழைவரி).
5. ஹஜ் யாத்திரை செல்வது.
துல்ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் முதல் 12 ம் நாள் வரை மெக்காவில் இருக்கும் காபாவிற்கு செல்வதே ஹஜ் பயணம்.
முதல் மனிதரான ஆதம் நபி, வானவர் ஜிப்ரீலின் உதவியுடன் கட்டினார்.
பிற்காலத்தில் இயற்கை சீற்றத்தால் மறைந்தது. அதன் பிறகு பல நுாற்றாண்டுகள்
கழித்து இப்ராஹிம் நபியால் மீண்டும் கட்டப்பட்டது. இன்றைக்கு ஹஜ் கடமையில் நிறைவேற்றப்படும் நற்செயல்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் இவரே.