ADDED : ஜூன் 12, 2025 11:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அவர்களிடம், ''உங்களுக்கு பொருட்கள் மீது விருப்பமா? இல்லை வாரிசுகளின் பொருட்கள் மீது விருப்பமா'' எனக் கேட்டார்.
''எங்கள் பொருட்கள் மீது தான் விருப்பம்'' என்றனர் தோழர்கள். ''உங்களுடைய பொருள் எது என்றால் இறைவனுக்காக செலவு செய்யும் பொருள் மட்டுமே. ஏனென்றால் அதுவே மறுமை நாளில் உங்களுக்கு பலன் தரும். இந்த பூமியில் நீங்கள் விட்டுச் செல்லும் பொருள் எல்லாம் உங்கள் வாரிசுகளின் பொருளாக மாறும். அதனால் உங்களுக்கு பலன் கிடைக்காது. எனவே பணத்தை தர்ம வழியில் செலவிடுங்கள்'' என்றார்.