
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்பத்தில் ஒருவருக்கு ஜலதோஷம், காய்ச்சல் என்றால் என்ன செய்வோம். எளிய பாட்டி வைத்தியத்தில் அதை சரி செய்ய முயற்சிப்போம். முடியாவிட்டால் மருத்துவமனைக்கு செல்வோம். அங்கு தரும் மருந்துகளால் பூரண குணம் ஏற்படும். இதைப் போலவே பாவத்தின் காரணமாக மனிதனுடைய இதயம் உள்ளிட்ட உறுப்புகள் துருபிடிக்கிறது. அதை சரிசெய்ய நல்ல எண்ணம் என்ற மருந்து அவசியம். அதை செயல்படுத்த தொடங்கினால் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் துாய்மை பெறும்.