
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனந்தம் விளையாடும் இடமாக வீடு இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு அது பிடிப்பதில்லை.
குறை சொல்லியும், கோள் மூட்டியும், அவதுாறு பேசியும் கணவன், மனைவியை பிரிக்க பார்ப்பார்கள். இச்செயலில் ஈடுபடுவோரைக் கண்டால் ைஷத்தான் மகிழ்ச்சி அடைவான்.
ஷைத்தான்களின் தலைவனான இப்லீஸ் அறநெறிகளைப் பின்பற்றாதபடி மக்களைக் கெடுக்க முயற்சிப்பான். குடும்பத்திற்குள், தம்பதியருக்குள் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு பிரியமானவர்கள். யாராவது ஒருவன், ''கணவன், மனைவிக்குள் நிரந்தர பிரிவை நான் ஏற்படுத்தி விட்டேன்'' என தெரிவித்தால் இப்லீஸ் 'நீயே சிறந்தவன்' எனப் பாராட்டுவான். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் மறுமை நாளில் தண்டனை கிடைப்பது உறுதி.