
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது திடகாத்திரமான ஒருவர் அவர்களை கடந்து சென்றார். அவரை பார்த்து, ''இவர் தன் உடல் பலத்தை சமுதாயத்திற்கு பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்'' என சிந்தித்தனர்.
''பச்சிளங்குழந்தையின் தேவைக்காக செல்கிறார் என்றால் அது நல்வழி. வயதான பெற்றோரின் பணிவிடைக்காக சென்றார் என்றால் அதுவும் நல்லதே. குறிக்கோளை நோக்கியும், தீய வழியில் இருந்து தன்னை பாதுகாக்கவும் செல்கிறார் என்றால் அதுவும் ஏற்புடையதே. ஆனால் ஆடம்பரம், பெருமை, புகழுக்காக செல்வதாக இருந்தால் அது ைஷத்தானின் வழி'' என்றார் நாயகம்.