நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அமைதி அடைந்த ஆன்மாவே. இறைவனின் பக்கம் செல்வாயாக. என் அடியார்களுடன் இணைந்திடு. சுவனத்தில் புகுவாயாக' என்கிறது குர்ஆன்.
'அமைதி அடைந்த ஆன்மாவே' என்பதை கவனியுங்கள். இதில் அமைதிக்குப் பொருள் என்னவாக இருக்கும்? அமைதி அடைந்த ஆன்மாவிற்கு பணவரவு மகிழ்ச்சியைத் தராது.
எந்த இழப்பும் கவலையை ஏற்படுத்தாது. உலகிலுள்ள மேடு, பள்ளங்கள் பாதிக்காது. எதற்கும் அது உணர்ச்சி வசப்படாது. எல்லாத் தீமைகளில் இருந்தும் பாதிப்பு இல்லாமல் கரை சேர்ந்து விடும். அந்நிலையில் அந்த ஆன்மா சுவனத்திற்குள் நுழையும்.