நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரபி மொழியில் 'ஸஹாபா' என்றால் தோழர். இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் என்பது நபிகள் நாயகத்தின் தோழர்களை குறிக்கும். நபிமார்களுக்கு அடுத்தபடியான உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டவர்கள் இவர்கள். அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அப்துல் ரஹ்மான் இப்ன் அவ்ப், அபீ வக்காஸ், ஸைத், அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். குர்ஆன், புனித வார்த்தைகளான அல்ஹதீஸை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்தவர்கள் இவர்களே.
'உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை இறை வழியில் செலவு செய்தாலும், நபித்தோழர்கள் செலவு செய்ததில் பாதியளவைக் கூட எட்ட முடியாது' என்பது இவர்களின் பெருமையை உணர்த்தும்.

