ADDED : நவ 20, 2025 01:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்களுக்கு தீமை செய்தவரை பழி வாங்க சிலர் துடிப்பார்கள். இது தவறான செயல் என்பதை கீழ்க்கண்ட சம்பவம் உணர்த்துகிறது.
துாதரான மூஸா (அலை) இறைவனிடம், ''என் அதிபதியே. உன் அடியாரில் அன்பிற்குரியவர் யார்'' எனக் கேட்டார். அதற்கு அவன், ''எவர் பழி வாங்கும் பலம் இருந்தும் எதிரியை மன்னிக்கிறாரோ, அவரே என் அன்பிற்கு உரியவர்'' என்றான்.
பார்த்தீர்களா... ஒருவர் உங்களுக்கு தீமையே செய்திருந்தாலும் அதை மறப்பதும், மன்னிப்பதுமே உயர்ந்த குணம்.

