ADDED : நவ 17, 2023 01:28 PM
நபிப் பட்டம் கிடைத்த பத்தாவது ஆண்டு நடை பெற்ற ஹஜ்ஜூக்கு, அரபு நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் மெக்காவுக்கு வந்தனர். நபிகள் நாயகம் ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் இஸ்லாத்தைப் பற்றி கூறினார். அப்போது ஒரு பகுதியில் பன்னிரண்டுபேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் யத்ரிப் (மதீனா) நகரிலுள்ள கஸ்ரஜ் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த ஆறு நபர்களும் அவர் சொல்வதை கவனித்தனர். பின்
அவர்கள் மெக்காவிலிருந்து யத்ரிபுக்குத் திரும்பியதும், ''மெக்காவில் ஒரு நபி தோன்றியுள்ளார். பல நுாறு ஆண்டுகளாக நிலவிய பகைமையை அவர் விரைவில் அகற்றி விடுவார்' என பிரபலப்படுத்தினர்.
அடுத்த ஆண்டு ஹஜ் சிறப்பு நாளில், முன்பு வந்தவர்களில் சிலரும் அவுஸ் கோத்திரத்திலிருந்த சிலரும் வந்தனர். அவர்கள் பின்வரும் வாக்குறுதிகளை கொடுத்தனர்.
1. இறைவனுடன் வேறு யாரையும் நாங்கள் இணை வைப்பதில்லை.
2. களவு செய்வதில்லை.
3. மக்களைக் கொல்வதில்லை.
4. நபியை முழுமையாகப் பின்பற்றுவோம்.
5. சுக துக்கங்களில் அவர்களுடன் உண்மையாக இருப்போம்.