
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை தேடிவந்த ஒருவர், ''நான் பெரிய பாவியாக இருக்கிறேன். குடிப்பழக்கம், விபசாரம் செய்யும் பெண்களுடன் தொடர்பு, திருட்டு, பொய் என பல தீய செயல்களை செய்கிறேன். இதில் இருந்து விடுபட ஏதாவது வழியைக் கூறுங்களேன்'' எனக் கேட்டார். அதற்கு நாயகம், ''பொய் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்'' என்றார். அவரும் 'பொய்தானே பேசக்கூடாது. இது எளிமையான செயல்தானே' எளிதாக நினைத்து வீட்டிற்கு சென்றார். அன்று இரவு அவரது கை, கால்கள் நடுங்கியதால் குடிக்கலாம் என நினைத்தார். ஆனால் யாராவது கேட்டால் என்ன செய்வது? உண்மையை சொல்ல வேண்டுமே என நினைத்து அதை விட்டுவிட்டார். இப்படி பொய் பேசாமல் இருப்பது தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு துணையாக நின்றது.