நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈஸா (அலை) கீழ்க்கண்டவற்றை சொல்கிறார். மனிதர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அவர்கள் மீது அனுதாபம் பொங்குகிறது. உலக இன்பத்தைப் போற்றி வரவேற்கும் மனிதன் மரணத்தின்போது என்ன செய்யப்போகிறான். இம்மையையும் அதன் இன்பங்களையும் அவன் எப்படி விட்டுப் பிரியப் போகிறான். உலகம் அவனை பித்தனாக்குகிறது. ஆனால் அதை அவன் பூரணமாக நம்புகிறான். அவர்கள் எதை வெறுக்கிறார்களோ அதையே அணைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. எதை விரும்புகிறார்களோ அதை இழக்க வேண்டி வருகிறது.