நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபம் என்பது ஷைத்தானால் வரவழைக்கப்படும் செயல். அவன் நெருப்பைப் போன்றவன். நெருப்பு ஓரிடத்தில் பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்கிறோம். கோபத்துக்கும் சிறந்த மருந்து தண்ணீர் தான். இதனால் கோபம் வந்தால் 'ஒளு' செய்து கொள்ளுங்கள் என்கிறார் நபிகள் நாயகம்.
தொழுகைக்குச் செல்லும் முன் ஒளு செய்வார்கள். அதாவது தண்ணீரால் கை, கால்களை கழுவுவார்கள். கோபம் வரும் போது இதைச் செய்தால் மனம் அமைதியாகும்.