நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''யவ்ம இதின் துஹத்திஸு அக்பாரஹா (அந்த நாளில் பூமி தன் நிலைமைகள் அனைத்தையும் எடுத்துரைக்கும்)'' என்னும் வசனத்தை நபிகள் நாயகம் ஓதினார். தோழர்களிடம் இதற்கான அர்த்தத்தை கேட்கவே அவர்கள் தெரியாது என்றனர். பின் அவரே கூறினார்.
'இன்ன பெண், இன்ன ஆண் என முதுகின் மீது, இன்ன நாளில், நேரத்தில் இந்தக் கெட்ட, நல்ல செயலைச் செய்தார்கள் என்று பூமி மறுமைநாளில் சாட்சியளிக்கும். மக்களின் செயல்களையே நிலைமைகள் என்று இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.