ADDED : ஜன 12, 2024 04:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''மறுமையில் சிலர் விசாரணை செய்யப்படுவர். மலைபோன்று அவர்களின் நன்மைகள் குவிந்து இருந்தாலும், சுவனத்தின் வாசனையை அனுபவிக்க முடியாது. அவர்கள் கொடிய தண்டைக்கு அனுப்பப்படுவார்கள்'' என கூறினார் நபிகள் நாயகம்.
இதைக்கேட்டவர்கள், ''ஏன் நன்மை செய்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் இறை வணக்கத்தை ஒதுக்கியவர்களா'' எனக்கேட்டனர்.
''இல்லை. அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரவெல்லாம் நின்று வணங்கினார்கள். பகலெல்லாம் நோன்பு பிடித்தார்கள். ஆனால் இம்மையில் சிறியதொரு பயனை அடைவதற்காக எந்த வணக்கத்தையும் அவர்கள் ஒதுக்கித் தள்ள தயாராயிருந்தார்கள். இதனால்தான் மறுமையில் கொடிய தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.