
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூபி ஞானி ஒருவர் சீடர்களுடன் வெயிலில் நடந்து சென்றார். அப்போது குளத்தை பார்த்ததும் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வரும்படி ஞானி சொன்னார். உடனே சீடன் ஒருவன் குளத்திற்கு சென்றான். ஆனால் அது சேறும் சகதியும் மேலே வந்து தண்ணீர் குடிக்கும்படி இல்லை. இதை ஞானியிடம் வந்து கூறினான்.
அதற்கு அவர், ''சிறிது நேரம் கழித்து செல். குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைக்கும். அது மட்டுமல்ல. நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். சிறிது கால அவகாசம் கொடுத்தால் அது தானாகவே சரியாகிவிடும்'' என்றார்.