ADDED : பிப் 02, 2024 02:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாராவது தீமை செய்துவிட்டால் மனம் வருந்தியோ, ஆவேசப்பட்டோ அவர்களுக்கு பலர் சாபம் கொடுக்கின்றனர். இப்படி செய்வது கூடாது. பிறரை சபிப்பவர்கள் கியாமநாளில் பிறருக்காக பரிந்துரை செய்பவர்களாகவோ இறை நேசர்களாகவோ இருக்க முடியாது.
வெறுப்பு கொண்டவர்களே சாபமிடுகிறார்கள். ஆனால் அவர்களையும் நேசிக்க வேண்டும்.
'உன்னை வெறுப்பவன் மீது நேசம் கொள். உனக்கு இல்லை என்று சொல்பவனுக்கு கொடு.
உனக்கு அநியாயம் செய்பவனை மன்னித்துவிடு. மீஸான் என்னும் தராசில் நல்ல குணத்தை விட விசேஷமானது வேறு எதுவும் இல்லை'.