ADDED : மார் 01, 2024 02:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெதீனாவில் யூதர்களில் மூன்று கோத்திரத்தினர் செல்வாக்குடன் திகழ்ந்தனர்.
1. பனுா கைனுகா 2. பனுா நுலைர் 3. பனுா குறைலா. இவர்கள் மெதீனாவின் சுற்றுப்புறங்களில் பெரிய, உறுதியான கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர்.
இவர்கள் நாயகத்துடன் பகைமை கொண்டிருந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
1. மெதீனாவாசிகள் முஸ்லிமாக மாறியது.
2. யூதர்களின் பகைவர்களான ஒளஸ்,
கஸ்ரஜ் குடும்பத்தாரிடையே பகைமை இருந்தது. மேலும் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு விடாதபடி யூதர்கள் முயன்று வந்தனர். ஆனால் அவர் அங்கு வந்ததும் இவ்விரு கோத்திரத்தினரும் ஒற்றுமையாக வாழத் தொடங்கினர். இருந்தாலும் தங்களின் நிலையை வெளிப்படுத்தாமல் முஸ்லிம்களை தாக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.