நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சக மனிதர்களுடன் அன்புடன் நடக்க வேண்டும். பெரியவர்களையும், சான்றோர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டும். 'இறைநம்பிக்கை கொண்டவர்களே... வாய்மையை நேசிப்பவர்களாகவும், நீதி, நேர்மையை பின்பற்றுபவர்களாகவும் திகழுங்கள்.
மற்றவர்களின் மீதுள்ள பகையுணர்வு உங்களை நீதியில் இருந்து பிறழச் செய்து விடக் கூடாது. உயிர்களின் மீது அன்பு செலுத்துங்கள். மனித ரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அது அநியாயமாக சிந்தக் கூடாது. இதையும் மீறி பிறரை அநியாயமாக கொல்பவர் மனித குலத்தையே கொலை செய்தவராவார்.