நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறரை குறை கூறி அதில் மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் உள்ளது. இந்த குணம் புறம் பேசுவதற்கு சமம். இது ஒருவருக்கொருவர் பகை, பிரிவினையை ஏற்படுத்தும். இதனால் நண்பர்களாக இருந்தவர்கள் கூட பிரிய நேரிடும்.
உங்களின் சகோதரர் மீதுள்ள குற்றம், குறைகளை நீங்கள் சொன்னால் கூட அது புறம் பேசியதாகி விடும். அவர் மீது குறை இல்லாவிட்டால் அது அவரைக் குறித்து அவதுாறு கூறியதாகும். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேச வேண்டாம்.