நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திறமை, அறிவு, பணம், அனுபவத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுகிறோம். இது சரியானது தான் என்றாலும் சில நேரங்களில் தவறுக்கும் வழிவகுக்கிறது. எப்படி என்றால்... வெற்றி பெற்றால் 'நான் சாதித்து விட்டேன்' என ஆர்ப்பரிப்பார்கள். தோல்வி வந்தால் அதை ஏற்க முடியாமல் துவண்டு விடுவார்கள்.
'தவக்குல்' அதாவது இறைவனை சார்ந்திருந்தால் இந்நிலை உண்டாகாது.
முயற்சிகளை செய்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில், ' முயற்சிக்கான பலனைத் தருவது இறைவா... உன் பொறுப்பு' என ஒருவன் வேண்டுவான். தவக்குல் பின்பற்றுவோருக்கு வெற்றி, தோல்வி எது வந்தாலும் நிம்மதி நிலைக்கும்.