ADDED : ஜூன் 14, 2024 01:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக குர்பானி கொடுக்கக் கூடாது.
உதாரணமாக எங்கள் பள்ளிவாசலில் தான் குர்பானிக்காக அதிக பிராணிகள் அறுக்கப்பட்டன என பெருமை பேசக் கூடாது. மாறாக முழு நோக்கமும் இறை திருப்திக்காக இருக்க வேண்டும் என்பதை கீழ்க்கண்ட குர்ஆன் வசனம் சொல்கிறது.
'குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ இறைவனை ஒருபோதும் அடைவதில்லை. உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். உங்களுக்கு அவன் நேர்வழியைக் காண்பிக்கவும், அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் நோக்கத்திலும் இதைக் கொடுத்திருக்கிறான். ஆகவே நன்மை செய்வோருக்கு நன்மாராயம் (புகழ்) கூறுவீராக'