ADDED : ஆக 31, 2018 02:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகம் தன் மகள் பாத்திமா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். திருமணமான பிறகு ஒருமுறை தந்தையைக் காண வந்த மகள் ''தந்தையே...எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு ஆள் வேண்டும். உங்களிடம் உள்ள அடிமைகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்றார்.
நாயகம் “மகளே! வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அதை நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அதற்குரிய பலத்தை அருள் செய்வான்” என்று சொல்லி கணவரின் வீட்டுக்கு அனுப்பினார்.