ADDED : ஆக 26, 2018 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை நாயகம் ''உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது''
உடனே சிலர் ''அப்படியானால் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஏற்று அதன் படியே செயல்படலாம் அல்லவா?''என்றனர்.
அதற்கு நாயகம் ''யார் இறைவனுக்கு பயந்து தனது செல்வத்தை நன்மையான செயல் செய்கிறாரோ அவருக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ அவனுக்கு நரகத்தின் பாதை காட்டப்படுகிறது''என்றார்.
நல்லது, கெட்டதை தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் நம்மை சார்ந்தே உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் உலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால் மறுமை நாளில் நரகத்தில் கிடந்து உழல வேண்டியிருக்கும்.