ADDED : ஆக 26, 2018 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். மனசாட்சி உறுத்தும் போது இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அவன் மன்னிக்க மாட்டான். நிச்சயமாக தண்டனை வழங்கியே தீருவான்.
ஆனால் மூவர் மட்டும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவர். ''பொய்யே பேசாமல் நாக்கை கட்டுப்படுத்துபவன், கோபத்தை வெளிப்படுத்தாமல் பிறரை மன்னிப்பவன், முடிந்தவரை எல்லோருக்கும் உதவுபவனை இறைவன் மன்னிக்கிறான்'' என்கிறார் நாயகம்.