நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒளியைக் கொண்டேதான் 'குர்ஸீ'யும் (ஆசனம்) படைக்கப்பட்டுள்ளது. இந்தக் 'குர்ஸீ' முத்தைக் கொண்டு உண்டாக்கப்பட்டது. இதன் எல்லை ஏழு வானங்களையும், பூமியையும் உட்கொண்டதாயுள்ளது. இதன் வலப்புறம், இடப்புறத்தில் பத்தாயிரம் 'குர்ஸீ'கள் உள்ளன. இவையனைத்திலும் அமர்ந்தவாறு வானவர்கள் ஆயத்துல் குர்ஸீ என்ற இறை வசனத்தை ஓதிக் கொண்டிருக்கின்றனர். இதனுடைய நன்மை உலகில் அண்ணலாரைப் பின் தொடரக்கூடிய 'உம்மத்து'களில் யார், யார் இந்த ஆயத்துல் குர்ஸீ என்ற வசனத்தை ஓதுகிறார்களோ அவர்களுக்குச் சேருகிறது. இந்த வசனம் குர்ஆனில் இரண்டாம் அத்தியாயத்தில் 255ஆம் வசனமாக இருக்கிறது.