ADDED : நவ 17, 2017 10:36 AM

நம்பிக்கை துரோகம் மாபெரும் கொடுமையாகும் என்கிறார் நபிகள் நாயகம்.
ஒரு பொருளை ஒருவரிடம் கொடுத்து விட்டு, வெளியூர் சென்று விட்ட ஒருவர், திரும்பி வரும் போது, அப்பொருளை அவர் கவர்ந்து சென்றிருந்தால், கொடுத்தவரின் நிலைமை மோசமாகப் போய் விடும். மகளின் திருமணத்துக்காக சேர்த்த பொருளை, நம்பிக்கையுடன் நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தார் ஒருவர். அந்த நண்பர் திடீரென ஒருநாள் அதை அபகரித்து விட்டால், அந்தக் குடும்பம் துடிதுடித்துப் போகிறது.
அடுத்தவர் பொருளில் நன்றாக வாழ்ந்த இந்த நிறுவன அதிபர், திடீரென மோசடி செய்கிறார் என்றால், எத்தனை ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
“நம்பிக்கைக்குஉரியவராக கருதி, தம் பொருளை உம்மிடம் அடைக்கலமாக கொடுத்து வைக்கிறாரோ, அவருடைய பொருளை திரும்பக் கொடுத்து விடுங்கள். உம்மை மோசடி செய்பவர்களை நீங்களும் மோசடி செய்யாதீர்,” என்கிறார் நாயகம்.