ADDED : நவ 12, 2017 04:34 PM

உலகிலேயே மன்னிக்க முடியாத குற்றம் என நாயகம் குறிப்பிடுவது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பது தான். இதுபற்றி அவர் கூறும் போது, “இறைவழியில் உயிரை தியாகம் செய்தவனின் எல்லா பாவமும் மன்னிக்கப்பட்டு விடும், கடனைத்தவிர!” என்கிறார்.
மனிதன் நல்லவனாக வாழ்ந்திருக்கலாம். குர்ஆனை மிகச்சிறப்பாக ஓதியிருக்கலாம். ஐந்து வேளை தொழுகை நடத்திஇருக்கலாம். எல்லோருக்கும் நல்லவராக இருந்திருக்கலாம். ஆனால், மனைவி, குழந்தைகள் கஷ்டப்படும் போது கடன் வாங்கி அவர்கள் உள்ளத்தை குளிர்வித்து விட்டு, கடனை அடைக்காமல் இருந்தால், அவர் எவ்வளவு நல்லவராக இருந்தும், மன்னிப்புக்கு இடமின்றி போகிறது.
இக்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, திருப்பி கட்டாமல் ஏமாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.
அவர்கள் ஒருவேளை இங்கே தப்பி விட்டாலும், இறைவனால் தரப்படும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.