
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறுமை நாளில் தன் தொழுகை, நோன்புடன் இறைவனின் முன் ஒருவன் ஆஜராவான். அவன் வாழும்போது யாரையாவது திட்டியிருப்பான். இட்டுக்கட்டி யார் மீதாவது அவதுாறு சொல்லியிருப்பான். எவருடைய பணத்தைப் பறித்திருக்கலாம். நியாயம் இல்லாமல் யாரையாவது அடித்திருக்கலாம். ஏன் கொலையும் செய்திருக்கலாம். இந்நிலையில் அவனால் அநீதிக்குள்ளானவர்களுக்கு அவனது நன்மைகள் பங்கிடப்படும். அவனது நன்மை அனைத்தும் தீர்ந்து போய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் கூட மிஞ்சியிருக்கலாம். அதன்பின் அவர்களின் பாவங்கள் இவனது கணக்கில் எழுதப்படும். அதனால் அவன் நரக லோகத்தில் இருந்து வீசியெறியப்படுவான். எனவே பாவம் செய்யாதீர்கள்.