நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் ஒருநாள் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மிகவும் சோர்வுடன் நடந்து வந்த ஒருவர், இவர்களை கண்டு வணங்கினார். உடனே நாயகம் அவரது கைளைப் பற்றிக் கொண்டு, கண்களில் ஒற்றிக் கொண்ட பின் அனுப்பி வைத்தார்.
''வந்தவரோ சாதாரண உழைப்பாளி. அவருக்கு ஏன் இப்படி நன்றி கூறுகிறீர்கள்'' என தோழர்கள் கேட்டனர்.
''இவர் சாதாரண மனிதர் என்றாலும் கடும் உழைப்பினால் இவரது கைகள் காய்த்து விட்டன. உழைப்பின் சின்னமான அவரது கைகளுக்கு மதிப்பளிப்பது நமது கடமை'' என்றார்.