ADDED : ஜூலை 27, 2018 02:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமுதாயத்தில் அனாதைகளும், பெண்களும் 'பலவீனர்' என்ற பிரிவில் இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் நடக்கக்கூடாது என இஸ்லாம் எச்சரிக்கிறது.
பலவீனமான ஒருவனால் தன்னுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. இவர்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். எந்த நேரத்திலும் இவர்கள் தாக்கப்படலாம். அப்படி தாக்கப்பட்டால் தட்டிக்கேட்க நாதி இருக்காது. எனவே, இப்படிப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்தால் இறைவனின் கருணை கிடைக்கும். அத்துடன் அந்த உதவியைப் பெற்றவர்கள் தனக்கு உதவியவர்கள் மீது வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பார்கள். தான் ஒரு அனாதை என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகி விடும். எனவே, பலவீனமானவர்களின் விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்