ADDED : டிச 30, 2021 01:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தக்காலத்தில் நல்லவர்கள்கூட குழந்தைகள் மீதுள்ள கோபத்தால், தன் சொத்துக்களை அவர்கள் யாரும் எடுக்கக் கூடாது என மரண சாசனம் எழுதுகின்றனர். இப்படி செய்வது மிகப்பெரிய குற்றமாகும். என்னதான் கோபம் இருந்தாலும், ஒருவரின் சொத்தில் வாரிசுக்கு பங்கு கொடுத்தே ஆக வேண்டும். இது குறித்து நாயகம் சொல்வதைக் கேளுங்கள். ''எச்சரிக்கை! சொத்தில் வாரிசுகளுக்கு பங்கு கொடுங்கள். இது இறைவனின் கட்டளை. இதை மீறுபவர்கள் நரகம் செல்ல நேரிடும்'' என்கிறார்.