ADDED : டிச 30, 2021 01:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்மை பல பயங்கள் பின் தொடரும். இரவில் தனியாக துாங்க, அவரைப்பார்த்தால், இவரைப்பார்த்தால் பயம் என்று பலவிதங்களில் நம்மை துன்புறுத்தும். உண்மையாகவே இவை பயங்கரமானவை அல்ல. நம் உயிரை எடுப்பவையும் அல்ல. அவற்றில் இருந்து தப்பித்துக்கொண்டு வாழ்வோமே தவிர, அவற்றில் இருந்து விடுபட எவ்வித முயற்சியும் செய்வது இல்லை. ஏனென்றால் முயற்சிப்பதற்கும் பயம்.
இப்படியே வாழ்ந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. உண்மையில் பிரச்னையை எதிர்க்கும் சக்தி இருக்கும். ஆனால் பிரச்னைகள் வருமோ என்ற எண்ணம்தான் நம்மை வாட்டும். எனவே 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்று பணிகளை சரியாக செய்யுங்கள். பயமில்லாத வாழ்வு உங்களுக்கு சொந்தமாகும்.