ADDED : அக் 06, 2023 03:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் கீழ்க்கண்டதை கூறியுள்ளார்:
சில ஒட்டகங்கள் ைஷத்தான்களுக்கு உரியவை. அவற்றை பார்த்திருக்கிறேன். ஒருவர் பல ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். அவற்றை நன்கு கொழுத்தவையாய் ஆக்கி வைத்திருக்கிறார். அவற்றில் எதிலும் அவர் ஏறுவதுமில்லை. வாகனமில்லாத தன் சகோதரனுக்கும் ஒட்டகத்தை தருவதுமில்லை. ைஷத்தான்களின் வீடுகளை நான் பார்த்ததில்லை.
விளக்கம்: மக்கள் தனது செல்வச் செழிப்பை பிறருக்கு காட்டுவதற்காக தேவையின்றி கட்டும் வீடே ைஷத்தானின் வீடு. அவர்கள் அதில் வசிப்பதுமில்லை. தேவையுள்ள பிறருக்கும் தருவதுமில்லை. நபிகள் நாயகம் அப்போது இத்தகைய வீடுகளைக் கண்டதில்லை. ஏனெனில் அக்காலத்தில் இத்தகைய, 'பகட்டுப் பிரியர்கள்' அதிகமாக இல்லை.