நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒளு என்பது தொழுகை, தவாஃப் போன்ற வழிபாடுகளுக்காக உடல் உறுப்புகளை துாய்மைப்படுத்துவது. இதில் முகம், கை, கால்களைக் கழுவுவதும் தலையைத் தண்ணீரால் தடவுவதும் முக்கியமாகும். ஒருநாள் நபிகள் நாயகம் ஒளு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஒளுவில் பயன்படுத்திய தண்ணீரை எடுத்துத் தம்முடைய முகங்களில் தேய்த்தனர் அருகில் இருந்த தோழர்களில் சிலர்.
இதற்கு நாயகம், ''உங்களை இவ்வாறு செய்யத் துாண்டியது எது'' எனக்கேட்டார்.
''இறைவனின் மீதும், உங்களின் மீதும் கொண்டுள்ள அன்புதான்'' என பதில் அளித்தனர்.
''அப்படியென்றால் இறைவன், ரஸூலின் மீதும் அன்புகாட்டி மகிழ்பவர்கள் உண்மையை பேச வேண்டும். அமானிதமாக ஒப்படைக்கப்பட்டதை பாதுகாப்புடன் வைத்திருந்து உரியவரிடம் கொடுக்க வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.