ADDED : அக் 15, 2023 09:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறான எண்ணங்கள், சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றிய விஷயங்களை சேகரிக்காதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். இறைவனின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்.