நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்பங்கள், ஆசாபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது. கஷ்டங்களால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது. அதாவது மனஇச்சைகளின்படி நடந்து உலகத்தின் இன்பங்களிலேயே இருப்பவனின் இருப்பிடம் நரகமாகும். சுவனத்தை அடைய வேண்டும் எனும் ஆசையுள்ளவன், முட்கள் நிறைந்த வழியினைத் தேர்ந்தெடுத்து, மனஇச்சைகளுடன் போராடி அவற்றைத் தோல்வியுறச் செய்ய வேண்டும். எல்லாவித கஷ்டங்களையும் சகித்து நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான் சுகமும் சொகுசு வாழ்வும் உள்ள சுவனத்தை அடைய முடியும்.