ADDED : மே 04, 2018 02:52 PM

இப்போது உலகமே பணத்தின் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. சிலர் பணம் பெறுவதற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்!
தனித்து வாழும் ஒருவரால் பணத்தை சேர்ப்பது மிக கடினம். எனவே ''ஒருவர் செல்வந்தராக வேண்டும் என விரும்பினால் அல்லது ஆயுள் நீளமாக வேண்டும் என விரும்பினால் அவர் தமது உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்,” என்கிறார்.
மேலும், ''பணக்காரர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்தால், பழைய குழம்பாக இருந்தாலும் பரவாயில்லை... ஏதோ ஒன்றை அவனுக்கு கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட வேண்டும்.” என்கிறார்.
“பொருட்செல்வம் வைத்திருப்பவர் அதே நினைவில் சீரழிந்து போகிறார். தன் காலம் முழுவதையும் பொருள் தேடுவதிலேயே செலவு செய்பவரையும், சம்பாதித்த பொருளில் சிறிது கூட செலவு செய்யாதவரையும் இறைவன் விலக்கி விடுவான்,” என்றும் எச்சரிப்பதோடு, “பொருட் செல்வத்தை சம்பாதிப்பதை விட, ஆன்மிகச் செல்வத்தை சம்பாதிப்பதே சிறந்தது,” என்றும் சொல்கிறார்.
சம்பாதிப்பதில் இயன்றவரையில் பிறருக்கு உதவி செய்வோம்.