கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க தண்ணீரும், நிழலும் அவசியம். பூமியில் அவை எளிதாக கிடைக்கும்.
ஆனால் மறுமையில்? அங்கு அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப வியர்வையில் நனைவர். 'மறுமை நாளில் சூரியன், உயிர்களுக்கு இடையே சிறிது துாரம் இருக்கும். அதன் வெப்பத்தால் மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்க நேரிடும்.
ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். அங்கு அர்ஷின் நிழலில் மட்டுமே நிற்க முடியும். 'அர்ஷ்' என்பது இறைவனின் அரியணை.
கீழ்க்கண்ட ஏழு பிரிவினரைத் தவிர வேறு யாருக்கும் அந்த நிழல் கிடைக்காது.
1. நீதி தவறாத மன்னன்
2. இறை சிந்தனையுடன் வாழ்ந்தவர்.
3. பள்ளிவாசலின் நினைவிலேயே இருப்பவர்.
4. நட்பு, பகையை இறைவனுக்காக வெளிப்படுத்தியவர்.
5. தகாத உறவுக்கு அழைத்தும் அதை ஏற்காதவர்.
6. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் தர்மம் செய்பவர்.
7. தனிமையில் வழிபாடு செய்யும் போது கண்ணீர் சிந்துபவர்.