
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டே சிலர் இருக்கிறார்கள். இதைக் கேட்டு வருந்துபவரும் உண்டு. பிறர் மனதை நோகடித்து வேடிக்கை பார்க்கவே சிலர் கேலி பேசுகிறார்கள்.
இவர்களிடம் மவுனமாக இருப்பது நல்லது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என யாருமில்லை. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கும் இல்லை. எனவே கிண்டல் பேச்சை பொருட்படுத்தாதீர். கேலி பேசுவோருக்கும் நன்மை செய்யுங்கள்.