ADDED : செப் 10, 2023 05:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகோதரர்களான இம்ரான், பஷீர் இடையே மாதந்தோறும் சண்டை வரும். எதற்காக? 'தாய், தந்தையை யார் வீட்டில் இந்த மாதம் தங்க வைத்துக்கொள்வது' என்ற வாதம்தான் அது. வயதான காலத்தில் பெற்றோரின் மனதை இருவரும் அறியவில்லை. இவர்களை போன்றோருக்கு இறைவன் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறான்.
* பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
* அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்.
* அவர்களின் பேச்சை பணிவுடன் கேளுங்கள்.
* அவர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துங்கள்.

