ADDED : டிச 19, 2021 02:43 PM

நம்மில் பலர் இருப்பார்கள். 'கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் வாங்கணும்' என்று நண்பர்களோடு ஜாலியாக வாழ வேண்டிய வயதை நழுவவிடுவார்கள். சரி.. வேலைக்கு சென்றால் அங்கு சந்தோஷமாக இருப்பார்களா.. என்றால் அதுவும் இல்லை. 'வீடு கட்டணும். வாழ்க்கையில் செட்டில் ஆகணும்' என்று பணத்திற்காக ஓடுவார்கள். குழந்தைகள், பெற்றோர்களை சரியாக கவனிக்க மாட்டார்கள். இப்படி வாழ்க்கையில் பலவற்றை இழப்பார்கள்.
இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.. நகரும் நாட்களை விட்டு நாளையில் நுழைவார்கள். நாளையும் இப்படியே கடந்துவிடும். வயதான காலத்தில் 'கடமைகளை ஒழுங்காக செய்யவில்லையே' என்ற கவலைகள் மட்டுமே மிஞ்சும்.
அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை அந்தந்த பருவத்தில் சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். அதுபோலத்தான் வாழ்க்கையும். உங்களுக்குரிய கடமைகளை ஒழுங்காக செய்யுங்கள். வாழ்க்கை ருசியாக மாறும்.