நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவனின் இரண்டாம் வகைப் படைப்பாகிய எழுதுகோல் நீளத்தில் 500 வருட கால நடைப் பாதைத் துார அளவாகவும், அகலத்தில் 40 வருட கால நடைப்பாதைத் துார அளவாகவும் உள்ளது. மூன்றாம் வகைப் படைப்பாகிய லவ்ஹுல் மஹ்பூழ் (பாதுகாக்கப்பட்ட பலகை) உயரம் வானத்திற்கும் பூமிக்குமுள்ள உயரமாகவும், அகலம் பூமியின் கிழக்கு மேற்கு துார அகலமாகவும் இருக்கிறது.
இதற்குரிய எழுதுகோல் ஒளியினால் படைக்கப்பட்டது. உலகத்தின் ஆதி முதல் அந்தம் வரை அதில் நடக்கக்கூடிய, மனிதர்களுடைய, மற்ற படைப்புகளுடைய எல்லா விஷயங்களைப் பற்றியும் அதில் எழுதப்பட்டுள்ளது.