ADDED : ஜூன் 27, 2022 02:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நாயகத்திடம் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து கேட்டார். அதற்கு அவரும், ஆற்றின் அருகில் வீடு இருக்கும் ஒருவர் தினந்தோறும் பல முறை குளித்தால் அவரது உடலில் அழுக்கு இருக்குமா என்று கேள்வி கேட்டார். இருக்கவே இருக்காது என்று தோழரும் பதில் கூறினார். அது போலத்தான் தொழுகையின்
முக்கியத்துவமும் கூட. தொழுபவரின் பாவங்கள் நீங்கும். பெரியோருக்கு கீழ்படியும் எண்ணத்தை மூலதனமாக பெறுவீர்கள் என்றார்.