ADDED : ஜூன் 27, 2022 02:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமும் எத்தனையோ சவால்கள்! அதை எதிர்கொள்ள நமக்கு தேவை தன்னம்பிக்கை. முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். 'நான் அழகாக இல்லை, என்னிடம் பணம் இல்லை; திறமை இல்லை' இப்படி வருந்தக் கூடாது. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏதாவது திறமை ஒவ்வொருவரிடமும் ஒளிந்திருக்கும். அதை கண்டுபிடித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
உங்கள் மனதிற்கு சரி என பட்டதை செய்யுங்கள்! வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.