ADDED : மே 13, 2022 02:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியம் என்ற வார்த்தைக்கு தனி மரியாதை உண்டு. அதை பின்பற்றுபவர்களுக்கு சமூகத்தில் தனி இடம் கிடைக்கும். ஒருவர் தன் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு சாட்சி இல்லை. நாம் என்ன செய்வோம். அவரிடம் இருந்து சத்தியம் என்ற சொல்லைத்தானே எதிர்பார்ப்போம். அந்த அளவிற்கு சத்தியத்திற்கு சக்தி அதிகம். அதையே ஒருவர் தவறாக பயன்படுத்தினால் என்னவாகும். அதனால் வரும் பின்விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும். அதுமட்டுமா.. பொய்சாட்சி கூறுபவர்களை இறைவன் விரும்பவேமாட்டான்.
இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது. அது என்ன... உண்மை வழியில் நடப்பது. உண்மையாக இருந்தால் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை அனைத்தும் உண்மையாகத்தானே இருக்கும்.