sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?

/

ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?

ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?

ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?


PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன் நிறைவு செய்கின்றனர். இந்த வழக்கம் எதனால்? சத்குரு சொல்வதைக் கேட்போம்.

சத்குரு:


உங்கள் உடலை கவனித்தால் 40 லிருந்து 48 நாட்களுக்குள் அது ஒரு சுழற்சிக்கு உள்ளாவதை உங்களால் உணர முடியும். இந்தக் காலத்தை ஒரு மண்டலம் என்கிறோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உடலுக்கு 3 நாட்களுக்கு உணவு தேவைப்படுவதில்லை. உடல் செயல்படும் விதத்தின் மீது உங்களுக்கு முழு விழிப்புணர்வு இருந்தால், சில நாட்களில் உடலுக்கு உணவு தேவையில்லை என்பதை நீங்கள் உணரமுடியும். சிரமமில்லாமல் அந்நாட்களில் நீங்கள் உணவை தவிர்க்க இயலும். ஏன், வளர்ப்பு பிராணிகளான பூனை, நாய் கூட ஒரு சில நாட்களில் உணவினைத் தவிர்ப்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குழந்தைகளும் இதைச் செய்வர். ஆனால் இன்றோ பெற்றோர், தங்கள் குழந்தைகளை உணவு உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இப்படித் திணிக்கத் தேவையில்லை.

உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், ஒரு சில நாட்கள், உணவு உண்ணத் தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அந்நாட்களில் கட்டாயப்படுத்திக் கொண்டு உணவு உட்கொள்வது சிறப்பானதாய் இருக்காது. விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனை புரிந்துகொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால், இந்தியாவில் ஏகாதசி என்னும் ஒரு நாளை குறிப்பிட்டு வைத்தனர். இப்படி குறிப்பிட்டாலாவது மக்கள் இதனை தவறாமல் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தனர்.

ஆனால் உடலை வருத்தி, கட்டாயப்படுத்தி உணவில்லாமல் செய்வது சரியல்ல.

ஒருவர் நீண்ட நாட்களுக்கு விரதமிருக்க விரும்பினால், அதற்கு சாதனாவின் துணையும் தேவை. சாதனா செய்து உங்கள் சக்தி உச்சநிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் சக்தியில்லாமல் உணர்ந்தால், உங்கள் உடல் தடுமாறினால், நீங்களும் எதையோ சாதிப்பதைப்போல் “நான் சாப்பிடவே மாட்டேன்” என்ற உறுதியுடன் இருந்தால், அதில் பிரயோஜனமே இல்லை. உங்கள் உடல் உணவு கேட்கும்போது, நான் சாப்பிட மாட்டேன் என்று உணவளிக்காமல் இருப்பது சரியான பழக்கமல்ல. இப்படி விரதமிருப்பது உங்கள் உடலை பாதிக்கும். ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக உங்கள் உடலுக்கு ஓய்வளிப்பது நல்லது.

ஒரு மாதத்தில் ஓரிரு நாட்கள் ஒருவர் ஜுஸ் டயட் எனப்படும் பழச்சாறு ஆகாரத்தில் இருக்கலாம். நாள் முழுவதும் தேனும் நீரும் கலந்து பருகலாம் அல்லது இளநீர் பருகலாம். ஆனால் சிறந்தது சாம்பல் பூசணி ஜுஸ். உங்களால் ஜுஸ் டயட்டில் இருக்க இயலாவிட்டால், பழ ஆகாரத்தில் இருக்கலாம். உடலிற்கு இது சற்றே இலகுவாய் இருக்கும், தினசரி எடுக்கும் உணவை பதம் செய்யும் பணி உடம்பிற்கு இல்லாமல்போகும். இதுபோல் ஒரு மாதத்தில் இரண்டு நாட்களுக்கு நீங்கள் விரதமிருந்தால் உடலிலுள்ள கேன்சர் விளைவிக்கும் செல்கள் குறைக்கப்படும். ஏனெனில், இயல்பான செல்களைவிட கேன்சர் செல்களுக்கு 40 லிருந்து 45 மடங்கு அதிக உணவு தேவை. உடலுக்கு உணவளிக்காத பட்சத்தில் சாகும் முதல் விஷயம் கேன்சர் செல்களே. இந்த கேன்சர் செல்களால் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது.

ஒரு பிச்சைக்காரர் வந்தால் அவருக்கு பழைய உணவையோ அல்லது ஏதோ ஐந்து, பத்து ரூபாயை வீசியெறியும் வழக்கம் உள்ள நம்மில் பலரும், உங்கள் ஒருவேளை உணவை அவருக்கு வழங்கலாம். ஒரு நாளைக்கு அந்தப் பிச்சைக்காரரை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அரசனை போல் உணவளிக்கலாம். அந்த உணவை அந்த ஒரு நாளைக்காவது அவர் ரசிக்கட்டும், ருசிக்கட்டும். அது அவருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.






      Dinamalar
      Follow us