PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

அப்படி பேசக்கூடாது!
'காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றபடி நாமும் தயாராக இருக்க வேண்டும்.இல்லையெனில் ஓரம் கட்டி விடுவர்...' என
கவலைப்படுகின்றனர், பா.ஜ.,வில் உள்ள மூத்த நிர்வாகிகள்.ஒவ்வொரு வாரமும்மத்திய அமைச்சரவை கூடி, அவ்வப்போது
மேற்கொள்ள வேண்டியதிட்டங்கள் குறித்துஆலோசிப்பது வழக்கம்.கூட்டம் முடிந்ததும், மூத்த அமைச்சர்
ஒருவர், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகையாளரிடம் விளக்குவார்.ஏற்கனவே ரவிசங்கர்
பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் போன்ற மூத்த அமைச்சர்கள்,இந்த பணியை செய்து வந்தனர். அதற்கு பின், நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்குர் போன்றோர் செய்தனர்.
ஆனால், சமீப காலமாக இந்த முக்கியத்துவம்வாய்ந்த பணி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டத்தின் புதிய கொள்கை குறித்து, அவர் தான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் விளக்கினார். இதைப் பார்த்த மற்ற மூத்த தலைவர்கள், 'இதற்கு பின், ஏதோ ஒரு திட்டம் இருப்பதாக தோன்றுகிறது...' என, முணுமுணுக்கின்றனர்.
ஆனால், மத்திய அரசு வட்டாரங்களோ, 'ஓய்வூதிய திட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால், ரயில்வே அமைச்சர்
இது குறித்து விளக்கம் அளித்திருக்கலாம்.மற்றபடி, இதற்கு கண், காது வைத்து பேசுவது சரியில்லை...' என, ஆதங்கப்படுகின்றனர்.