sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

அக்கம் பக்கம்

/

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்


PUBLISHED ON : செப் 25, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 25, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோடிக்கு ரூட் கிளியர்



அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், அந்த கட்சியின் மேலிட தலைவர்களுக்குள், நீண்ட நாளாக மறைமுக யுத்தம் நடந்து வந்தது.

வயது மூப்பு காரணமாக, இந்த போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக, மூத்த தலைவர் அத்வானி, தானாகவே அறிவித்து விட்டார்.அடுத்ததாக, அக்கட்சியின் சீனியர் தலைவர்களான சுஷ்மாவுக்கும், அருண் ஜெட்லிக்கும் இடையே தான், போட்டி இருந்தது; இருவருக்கும் இடையே, நேரடியான மோதலும் அவ்வப்போது இருந்து வந்தது.இப்பிரச்னைக்கு ஒரு முடிவே வராதா என, பா.ஜ., தொண்டர்கள், நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்தனர். யாரும் எதிர்பாராத வகையில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, திடீரென களத்தில் குதித்து, உண்ணாவிரதம் என்ற ஒரே ஒரு நடவடிக்கை மூலம், ஜெட்லியையும், சுஷ்மாவையும் ஓரம் கட்டி விட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.குஜராத் கலவரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்பும், அமெரிக்க அரசின் பாராட்டும், நரேந்திர மோடிக்கு, 'டானிக்' ஆக அமைந்து விட்டன. அடுத்த கட்டமாக, ஜெட்லி, சுஷ்மா ஆகியோரின் ஆதரவை பெறும் முயற்சியிலும் இறங்கி, அதிலும் வெற்றி கண்டு விட்டார் மோடி.இந்த இரண்டு தலைவர்களுமே, உண்ணாவிரதத்துக்கு வந்து, மோடிக்கு, வாயார பாராட்டுப் பத்திரம் வாசித்ததை, பா.ஜ.,வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களே, ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.பா.ஜ., தொண்டர்களோ, 'அப்புறம் என்ன... மோடிக்கு, 'ரூட் கிளியர்' ஆகிவிட்டது. இனிமேல், டில்லி தான் அவரது குறி' என, பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.



தாத்தாவுக்கு ஓகே; பேரனுக்குமா?



மகாராஷ்டிர மாநில போலீஸ் அதிகாரிகள், கடும் மன உளைச்சலில் உள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே வகையறாக்கள் தான், இவர்களின் மன உளைச்சலுக்கு காரணம்.பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு, ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, பால் தாக்கரேயின் பேரனும், சிவசேனா இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரேவுக்கும், தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆதித்யாவுக்கு, 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.இந்த பாதுகாப்பு போதாது என்று, மாநில அரசின் உத்தரவின்படி, ஆதித்யாவுக்கு சமீபத்தில், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாநில அரசுக்கு,இதனால் கூடுதல் செலவு பிடிக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களும், மன வருத்தத்தில் இருக்கின்றனர்.'என்ன இருந்தாலும், சிவசேனா எதிர்க்கட்சி; ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நம் தலைவர்கள், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தாக்கரே குடும்பத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிப்பது எந்த வகையில் நியாயம்' என,மனதுக்குள் புழுங்கித் தவிக்கின்றனர்.மகாராஷ்டிர மாநில போலீசாரோ, 'தாத்தாவுக்கும், மகனுக்கும் பாதுகாப்பு அளிக்கலாம்; அதற்காக, பேரனுக்கும் பாதுகாப்பு என்பது கொஞ்சம், 'டூ மச்' தான்' என, 'உச்' கொட்டுகின்றனர்.








      Dinamalar
      Follow us